ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்

Tamil_News_large_958770

மும்பை : லோக்சபா தேர்தலின் முதல் 4 கட்ட தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிபரத்தையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் தான் அதிகளவில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் ஆண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் பெண்களை விட அதிகம் என்றாலும், அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

கோவா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம் மற்றும் லட்சதீவில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஓட்டளித்துள்ளனர். 4 கட்ட தேர்தலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான பெண்களின் ஓட்டுப்பதிவு விபரம் :
அருணாச்சல பிரதேசம் : மொத்த ஓட்டு 76.90% – பெண்கள் 79.18%
கோவா : மொத்த ஓட்டு 76.83% – பெண்கள் 78.92%
அரியானா : மொத்த ஓட்டு 71.86% – பெண்கள் 70%
கேரளா : மொத்த ஓட்டு 74.02% – பெண்கள் 73.85%
மேகாலயா : மொத்த ஓட்டு 69.03% – பெண்கள் 70.09%
நாகாலாந்து : மொத்த ஓட்டு 88.57% – பெண்கள் 88%
டில்லி : மொத்த ஓட்டு 65.09% – பெண்கள் 63.77%
சிக்கிம் : மொத்த ஓட்டு 80.96% – பெண்கள் 81.47%
திரிபுரா : மொத்த ஓட்டு 84.90% – பெண்கள் 83.92
அந்தமான் நிகோபர் : மொத்த ஓட்டு 70.77% – பெண்கள் 70.48%
சண்டிகர் : மொத்த ஓட்டு 73.57% – பெண்கள் 74.15%
லட்சதீவு : மொத்த ஓட்டு 86.79% – பெண்கள் 88.46%
மிசோரம் : மொத்த ஓட்டு 61.7% – பெண்கள் 59.86%

2009ம் ஆண்டு தேர்தலின் போதும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். 2009ம் ஆண்டு 65.96 சதவீதம் பெண்கள் ஓட்டளித்துள்ளனர். இது ஆண்களை விட 15 சதவீதம் அதிகம். 1962ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான தேர்தல்களில் ஆண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். இந்த ஆண்டுகளில் ஆண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் 60 சதவீதமாகவும், பெண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் 46 % முதல் 57 % வரையே இருந்துள்ளது.

தேசிய தேர்தலில் பெண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் அதிகரித்திரப்பதற்கு தேர்தல் கமிஷனின் மிகப் பெரிய முயற்சியே காரணம் ஆகும். பிரசாரங்கள் மூலம் ஓட்டளிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம். வாக்காளர் பெயர் சேர்ப்பு முறையை எளிமைப்படுத்தியது உள்ளிட்ட பல முறைகளை எளிமையாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்திதே இதற்கு காரணம் என தேசிய மகளிர் கமிஷனின் நிர்மலா சமந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP