கணவன் குடும்பதைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஐடியா கொடுத்த மனைவி

anu

கேரள மாநிலத்தில் ஆற்றகல் அருகே மன்னாபாகம் என்ற பகுதியில் வசிப்பபவர் ஓமணா(67) இவரது மகள் விஜிஸ் (வயது40). விஜிஸ் மனைவி அனுசாந்தி (35). இந்த தம்பதிகளுக்கு சுவஸ்திகா (4).  என்ற குழந்தை உள்ளது.

அனுசாந்தி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் மேத்யூ(வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்ம் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில்  நினோ மேத்யூ, அடிக்கடி தனது காரில் அனுசாந்தியை அவரத  வீட்டிற்கு அழைத்து சென்று இறங்கிவிட்டுள்ளார். இதனை கண்ட அனு சாந்தியின் கணவர் விஜிஸ் மற்றும் மாமியார் ஓமணா கண்டித்துள்ளனர். ஆனால் அனுசாந்தி தனது கள்ளத் தொடர்பை துண்டிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விஜிஸ், நினோ மேத்யூவிடம் சென்று தனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கண்டித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.  இதில் ஆத்திரமடைந்த வினோ மேத்யூ கொலை வெறியுடன்  விஜிஸ் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது குறித்து விஜிஸின் அலறல் சத்தம் கேட்டு அவரது அம்மா ஓமாணா தனது பேத்தியுடன் ஒடிவந்தார். அப்போது ஓமணா மற்றும் சுவஸ்திகாவை   கத்தியால் குத்திவிட்டு வினோ மேத்யூ தப்பி ஓடடிவிட்டார். படுகாயம் அடைந்த ஓமணாவும், சுவஸ்திகாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஜிஸ் ஆற்றிங்கல் மருத்துவனைமயில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நினோ மேத்யூவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் போலீஸாரை  திடுக்கிடவைத்தன.

இது குறித்து போலீஸார் கூறுகையில், அனுசாந்தி கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த தனது குடும்பத்தார் அனைவரையும் கொன்றுவிட நினைத்துள்ளார். இதற்காக தனது கள்ளக்காதலன் வினோ மேத்வை தூண்டி விட்டு உள்ளார். கொலைகான திட்டம் குறித்தும், எப்படி வீட்டை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட தகவல்களை  அனுசாந்தி தனது கள்ளக்காதலனுக்கு மொபைல் வாட்ஸ்அப்பில்  அனுப்பியுள்ளார். இதற்காக வீட்டின் படங்களையும், ஒவ்வொரு அறையையும் செல்போனில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப் மூலம் நினோமாத்யூவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல் கொலை செய்துவிட்டு விட்டு தப்பியோடிது போன்ற திட்டததை ஜோடிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில் தொடர்ந்த விசாரணை நடத்திய போலீசார் அனுசாந்தியையும் கைது செய்தனர்.

மேத்யூவிற்கு திருணமம் ஆகி 4 வயதில் குழந்தை உள்ளது. மேத்யூவின் நடவடிக்கை பிடிக்காமல்  அவரது மனைவி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.

தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP