பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

Tamil_News_large_935453

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது.

கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, 49 நாட்கள் இருந்த அவர், ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை’ எனக் கூறி, பதவியை ராஜினாமா செய்தார்.அந்த சூட்டோடு சூடாக, லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த அக்கட்சி, பணம் இல்லாமல் திண்டாடுகிறது.

முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், ஆளும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், பிரமாண்டமான முறையில், பத்திரிகை, சுவர் விளம்பரங்கள், மொபைல் போன், இணையதள விளம்பரம், ‘டிவி’ என, கலக்கிக் கொண்டிருக்கையில், ஆம் ஆத்மி கட்சியிடம், பணம் இல்லாததால், கல்லூரி மாணவர்களை அழைத்து, தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகள் மூலம், பிரசாரம் செய்கிறது.தேர்தல் பிரசாரத்திற்கு, பல நகரங்களுக்கு செல்லும் கெஜ்ரிவால், அங்கு, ஓட்டல்களில் விருந்து வைத்து, தன்னுடன் விருந்துண்ணும் நபர்களிடம், 10 ஆயிரம், 20 ஆயிரம் என, பணத்தை திரட்டி வருகிறார்.குஜராத்தின், 26 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 30ம் தேதி, தேர்தல் நடக்கிறது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
Subscribe to our email newsletter today to receive updates on the latest news from all leading Tamil News Papers and TV Channels!
No Thanks
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
We respect your privacy. Your information is safe and will never be shared.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup