வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்

Tamil_News_large_956738

புதுடில்லி: நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலில் 68.29 சதவீத வாக்குகள் பதிவானதை அடுத்து தேர்தல் கமிஷன் உற்காசகமடைந்துள்ளது.
நாடு முழுவதும் 16-வது பார்லி., க்கான தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரையில் 111 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் சுமார் 68.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலை காட்டிலும் 7.90 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதே போல் வாக்களர்களை பொறுத்த வரையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காட்டிலும் சுமார் 28.81சதவீத வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். 
இதனால் தேர்தல் கமிஷன் உற்சாகமடைந்துள்ளது. வாக்களர்களிடையே ஏற்பட்டுத்திய விழிப்புணர்வுக்கு பலன் கிடைத்தது ஒரு புறம் இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பு ஆகியவை வாக்குகு பதிவு அதிகரிகக முக்கிய காரணம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 
நான்காவது கட்டமாக ஒன்பது மாநிலங்கள்(கேரளா, ஹரியானா, கோவா, அருணாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், நாகலாந்து) மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் (டில்லி, சண்டிகர், அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவு) ஆகியமாநிலங்களில் கடந்த தேர்தலை காட்டிலும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல கமிஷன் இயக்குனர் அக்ஷய்ரூட் தெரிவித்துளளார்.
கோவா, திரிபுரா,சண்டிகர், ஆகிய மாநிலங்களில் அதிக அளிவில்வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் , கோவா, சிக்கிம் , மேகாலயா, அருணாசல பிரதசேம், சண்டிகர், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளதும் வாக்கு பதிவு அதிகரித்து இருப்பதும் மிக முக்கிய காரணமாகும் என அக்ஷய்ரூட் தெரிவித்துள்ளார். 
மாநில வாரியாக பதிவான வாக்குகள் சதவீத்தில் : அருணாசல பிரதேசம்(76.90), கோவா(76.83). ஹரியானா (71.86), கேரளா (74.02), மேகாலயா(69.03), நாகலாந்து(88.57), டி்ல்லி(65.09), சிக்கிம் (80.96), திரிபுரா(84.90)ல அந்தமான்(70.77), சண்டிகர்(73.57), லட்சத்தீவு (86.79), மி்சோரம் (61.70)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
அனைத்து முன்னணி தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களிலிருந்தும் சமீபத்திய செய்திகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற இன்று எங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு பதிவுசெய்யவும் !
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் தகவல் பாதுகாப்பானது மற்றும் ஒருபோதும் பகிரப்படாது.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup