விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி

Tamil_News_large_940533

மெல்போர்ன்:”கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,” என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக்
கொண்டிருக்கின்றன.

செயற்கைக்கோள்:
இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள்
தெரிவித்தனர். இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீன செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியிருந்தது.இதே போல், பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளும், நேற்றுமுன்தினம், இதே பகுதியில், ஒரு பொருள் மிதப்பதை படம் எடுத்துள்ளது.உடைந்த பொருட்கள் மிதக்கும் இடத்துக்கு, ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் விரைந்துள்ளன. இந்திய விமானப்படையின் அதிநவீன விமானங்கள் இரண்டும், மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.சம்பவ இடத்தில் நிறைய பொருட்கள் மிதப்பதால், அந்த இடத்தில் விமானம் மூழ்கியிருக்கலாம், என,ஆஸ்திரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.காணாமல் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ஓட்டல்களில் தங்கியிருந்தனர். தற்போது, மலேசியாவில், கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களும், ரசிகர்களும், இந்த ஓட்டல் அறைகளை ஏற்கனவே, பதிவு செய்திருந்ததால், அங்கிருந்த, 30க்கும் அதிகமான விமான பயணிகளின் உறவினர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிரதமர் பேட்டி:
இதற்கிடையே, மலேசிய தலைநகர், கோலாலம்பூரில், அந்நாட்டு பிரதமர், நஜிப் ரசாக் அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ”மாயமான பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்; எனவே, அதில் பயணித்த பயணிகள், உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.பிரிட்டன் செயற்கோள் அளித்த தகவலின் பேரில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்,” என,தெரிவித்துள்ளார்.

கருப்பு பெட்டி:
விமானம் விபத்துக்குள்ளானதாக, மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளதால், இந்திய பெருங்கடலில், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்கா கப்பல் ஈடுபட்டுள்ளது. 20 அடியில் உள்ள கருப்பு பெட்டியை கூட இந்த கப்பல் கண்டு பிடிக்கவல்லது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP