poisones medicines

மனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்றுமல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது.

பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். அவற்றைக் கட்டுப்படுத்தத் தரப்படும் மருந்துகள் காலப்போக்கில் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்று விடுகின்றன. அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படுவதாலும், தவறாகப் பயன்படுத்தப்படுவதாலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நோய்களுக்குக் காரணமான நுண்ணுயிரிகளை அழிக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன. கடந்த அரை நூற்றாண்டு கால ஆன்டிபயாட்டிக் உபயோகத்தின் காரணமாக, இப்போது அவை வீரியம் இழந்து, நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்து விட்டிருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்கு அதிகமான வீரியங்களையுடைய எல்லா நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளையும் (ஆன்டிபயாட்டிக்) கொடுத்துப் பார்த்தும், சாதாரண ஜலதோஷம் போன்ற நுரையீறல் தொற்றைக்கூட குணப்படுத்த முடியவில்லை. இது மருத்துவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி இருக்கிறது.

மருந்துகளுக்கு, குறிப்பாக, நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஜீவ அணுவையுடைய நுண்ணுயிரி முதன்முதலில் சீனாவில்தான் காணப்பட்டது. அந்த ஜீவ அணுவை உடைய பாக்டீரியா குறித்து சீன மருத்துவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். சர்வதேச அளவில் இது குறித்து விவாதிக்கப்

பட்டது. அப்போது அவர்கள் அதிர்ச்சியளிக்கும் இன்னொரு உண்மையை உணர்ந்தனர்.

நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாத ஜீவ அணுவையுடைய அந்த பாக்டீரியா, தனது நுண்ணுயிரிக் கொல்லிக்கான எதிர்ப்பு சக்தியை ஏனைய நுண்ணுயிரிகளுக்கும் பரவவிட முடியும் என்பதுதான் அவர்கள் எதிர்கொண்ட அதிர்ச்சி. அப்படிப் பரவவிடும்போது, மனிதர்களுக்கும் அது பரவி, எந்தவித நுண்ணுயிரிக் கொல்லி மருந்தாலும் (ஆன்டிபயாட்டிக்) நோய்களை குணப்

படுத்த முடியாத நிலைமை ஏற்படக்கூடும்.

சமீபத்திய ஆய்வின்படி, ஆண்டுதோறும் ஏறத்தாழ 7,00,000 பேர் மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொற்றுக்களால் மரணமடை

கிறார்கள். இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமாகக் கூடும் என்கிறது அந்த ஆய்வு. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு, உலகளாவிய அளவில், சுமார் 100 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை ஒருவித பரிணாம முறையில் அடைந்து விடுகின்றன. தொடர்ந்து ஒரு மருந்து மீண்டும் மீண்டும் தரப்படும்போது, உடலில் உள்ள நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அந்த மருந்துக்கான எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுகின்றன. இந்த நிலைமையை அதிகப்படியான அல்லது தவறான நுண்ணுயிரிக் கொல்லி மருந்துப் பயன்பாடு விரைவுபடுத்துகிறது. தேவையில்லாத, அதிகமான ஆன்டிபயாட்டிக் பயன்பாடு மட்டுமல்ல, குறிப்பிட்ட கால அளவு முழுமையா

காமல் மருந்தை நிறுத்துவதும்கூட, நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு சக்தி வலு இழப்பதற்கான காரணியாகி விடுகிறது.

அதேபோல, கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், நோய் தொற்றிக் கொள்ளாமல் தடுக்கவும், தேவையே இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பண்ணைகளில் செலுத்தப்படுகின்றன. இதனால், நுண்ணுயிரிகள் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுகின்றன. மாமிச உணவை மனிதர்கள் உட்கொள்வதால், அந்த நுண்ணுயிரிகள் மனிதர்களிலும், ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடுகின்றன. சில நாடுகளில் பள்ளிகளில் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து நாடுகளிலும் இந்தத் தடை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

நுண்ணுயிரிகளில் காணப்படும் இப்போதைய ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தி தொடருமானால், மிகவும் அச்சுறுத்தும் சூழலை மனித இனம் எதிர்கொள்ள வேண்டிவரலாம். அறுவை சிகிச்சைகளும், உறுப்பு மாற்றுதலும் மிகவும் ஆபத்தானவையாகிவிடும். சாதாரண ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகூட உயிரிழப்பில் முடியும் நிலைமை ஏற்பட்டுவிடும். கட்டுக்குள் வந்துவிட்டது என்று நாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் பிளேக், காலரா, காச நோய், அம்மை போன்ற நோய்கள், அதிவீரியத்துடன் உயிர்பெற்றெழுந்து மனித இனத்தின் பேரழிவுக்குக் காரணமாகக்கூடும். ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முற்பட்ட நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், மக்கள் நல்வாழ்வு ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

இப்போது இருப்பதைவிட வலிமையும், வீரியமும் கொண்ட நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதனால் அதிக லாபமில்லை என்பதால் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகின்றன. அரசுதான் இதற்கான நிதியுதவி அளித்து ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தாக வேண்டும்.

மனித இனத்தை மிகப்பெரிய ஆபத்து எதிர்கொள்கிறது. கவனக்குறைவாக இல்லாமல் இதை நாம் சவாலாக எடுத்துக்கொண்டு விடை காணாமல் போனால், ஒட்டுமொத்த மனித இனமே அடுத்த நூறு ஆண்டுகளில் அழிந்து போகக்கூடும்!

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *