சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி

சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி

ராமநாதபுரம்: ”அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்., தனித்து போட்டியிடும். அப்போது, மக்கள் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்,” என காங்., துணைத் தலைவர் ராகுல் ராமநாதபுரத்தில் பேசினார். ராமநாதபுரம் காங்., வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, ராகுல் பேசியதாவது: இது, மீனவர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்கள் பிரச்னையை முதலில் பேச விரும்புகிறேன். மும்பையில் உள்ள மீனவர்களை நான் சந்தித்த போது, ‘விவசாயத்திற்கு தனி அமைச்சகம் இருப்பது ...
முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள் முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்

முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்

நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் ...
ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல் ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்

ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யக் குடியுரிமை வாங்குவதை எளிதாக்கும் விதமான புதிய சட்டத்துக்கு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். யுக்ரெய்னுடன் சென்ற மாதம் இணைந்துள்ள யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு ரஷ்யக் குடியுரிமை வழங்குவதாக வந்த சட்டத்தின் நீட்சியாக இந்த அறிவிப்பு வருகிறது. யுக்ரெய்னின் கிழக்குப் பகுதியும் ரஷ்ய மொழி பேசும் ...
மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவைக்கு ஆள்களை அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போது அதை மறுக்கிறார். அதிமுகவின் நெருங்கிய கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள்கூட, “கரசேவைக்கு ஆள்களை ஜெயலலிதா அனுப்பினார்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கையில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. ...
தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல் தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு குழு தமிழக வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. ...
ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்

ஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்

மும்பை : லோக்சபா தேர்தலின் முதல் 4 கட்ட தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிபரத்தையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் தான் அதிகளவில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் ஆண்களின் ஓட்டுப்பதிவு விகிதம் பெண்களை விட அதிகம் என்றாலும், அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கோவா, ...