வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்! வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...
மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல் மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல்

மீண்டும் நெதன்யாஹு! இஸ்ரேல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டது. வலதுசாரிக் கட்சியான லிகுட் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 30-ஐக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஆட்சியமைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது. எனவே, இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நான்காவது முறையாகப் பிரதமர் பதவியேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய-மிதவாதக் கூட்டணிதான் அதிக தொகுதிகளைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அந்தக் கூட்டணியில் தொழிலாளர் கட்சியும் சியோனிஸ்ட் யூனியன் கட்சியும் ...
நஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே! நஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே!

நஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே!

இயற்கை அல்லது அங்கக வேளாண்மை உலகளவில் 30 மில்லியன் எக்டேரில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிற்கு கிடைத்திருப்பது 117 வது இடம்தான். ஆனால் அதிக வேளாண் பரப்பு கொண்டது இந்தியாவும், சீனாவும் தான். பேச்சுரிமை, எழுத்துரிமை அதிகமுள்ள ஜனநாயக நாட்டில் இப்படித்தான் பயிர் செய்ய வேண்டுமென யாரையும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரமில் இயற்கை விவசாயம் சற்றே கூடுதலாக உள்ளது. அங்கே வித்தியாசமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியா அளவில் ஒப்பிடும் ...
நல்லுறவின் உந்துவிசை நல்லுறவின் உந்துவிசை

நல்லுறவின் உந்துவிசை

இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். பயணத்தின்போது, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை அமைதியாகவும் வளமாகவும் உருவெடுப்பதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டதை இலங்கையில் அனைத்துத் தரப்பாருமே வரவேற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய பகுதிகளுக்குச் சென்று அங்கு இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறார். ...
ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி? ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?

ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?

லங்காஷயர் மில் தொழிலாளர்களுடன் காந்தி. காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா? ‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம். இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ...
சாதியை ஒழிப்பது எப்படி? சாதியை ஒழிப்பது எப்படி?

சாதியை ஒழிப்பது எப்படி?

நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ...