இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு

இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு

ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன. 2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது ...
புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்! புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!

புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் ...
ஜனநாயகத்துக்கு மரியாதை ஜனநாயகத்துக்கு மரியாதை

ஜனநாயகத்துக்கு மரியாதை

“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று ...
தலைவர்களா இவர்கள்? தலைவர்களா இவர்கள்?

தலைவர்களா இவர்கள்?

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது. பொறுப்பான மூத்த தலைவர்கள், ஏனைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்தது போய், நாடாளுமன்ற விவாதத்தில் அனுபவசாலிகளான தலைவர்களே தரக் குறைவாகவும், முகம் சுளிக்கும் விதத்திலும் கருத்துகளைத் ...
மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்! மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!

மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!

பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி! இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு! பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது? நீண்ட காலம் சிறையில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு. “தூக்கு தண்டனைக் கைதி களில் பலர், சிறையில் தூக்குமேடைக்குக் கொண்டு ...
வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்! வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...