நல்லுறவின் உந்துவிசை நல்லுறவின் உந்துவிசை

நல்லுறவின் உந்துவிசை

இலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். பயணத்தின்போது, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை அமைதியாகவும் வளமாகவும் உருவெடுப்பதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டதை இலங்கையில் அனைத்துத் தரப்பாருமே வரவேற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய பகுதிகளுக்குச் சென்று அங்கு இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறார். ...
ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி? ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?

ஆங்கிலேயர்களின் கையாளா காந்தி?

லங்காஷயர் மில் தொழிலாளர்களுடன் காந்தி. காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா? புரட்சியை மழுங்கடித்தாரா? ‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம். இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ...
சாதியை ஒழிப்பது எப்படி? சாதியை ஒழிப்பது எப்படி?

சாதியை ஒழிப்பது எப்படி?

நடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் சுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ...
Powered by Big Tech Tips Online - Widget