இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி! இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி!

இலங்கையில் ஜனநாயகத்துக்கு வெற்றி!

அதிபர் பதவிக்காலம் 2016 ஜனவரியில்தான் முடியப்போகிறது என்றாலும், இலங்கை மக்கள் மூன்றாவது முறையாகவும் தன்னையே அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாரானார் மகிந்த ராஜபக்ச. அவர் தேர்தலுக்குத் தயாரானபோது, களத்தில் அவரை எதிர்த்து நிற்க வலுவான வேட்பாளர் என்று எவருமே இல்லை. 2009-ல் விடுதலைப் புலிகளைப் போரில் வென்ற சாதனையே தன்னைத் தொடர்ந்து வெற்றிபெறச் செய்துவிடும் என்று அவர் நம்பினார். மைத்ரிபால யாப்பா சிறிசேனா (63) ...

காட்சியும் மாறுமா? இலங்கையின் தேர்தல் முடிவுகள்!

இந்தியாவைத் தொடர்ந்து இப்போது இலங்கையும் மக்களாட்சியின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இலங்கையின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. சிறுபான்மையினரின் ஆதரவு மைத்ரிபாலா சிறீசேனாவுக்குக் கிடைக்கும் என்றபோதே அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இந்துக்கள் வாழும் பிரதேசமான வடக்கு மாகாணத்திலும், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இஸ்லாமியர்கள் வசிக்கும் ...
கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள் கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் ...
கடனாளியாக வேண்டாம் கடனாளியாக வேண்டாம்

கடனாளியாக வேண்டாம்

இன்றைய நிலையில் இரண்டு பேர் சந்தித்தால், அவர்களது பேச்சில் ஒருபகுதி கடன் தொடர்பாகத்தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும், சேமிப்புக்கு வழியில்லாத சூழலே நிலவுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவு செய்வது, பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு… என செலவுகளுக்குப் பஞ்சமில்லை. வரவு இருக்கிறதோ, இல்லையோ செலவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. வரவு குறைவாக இருந்து, செலவு அதிகரித்தால், பற்றாக்குறையைச் ...
ஒருமித்த கவனம், ஓஹோவென்ற வெற்றி! ஒருமித்த கவனம், ஓஹோவென்ற வெற்றி!

ஒருமித்த கவனம், ஓஹோவென்ற வெற்றி!

சின்ன வயதில் பூதக்கண்ணாடி கொண்டு சூரிய வெளிச்சத்தை ஒளிக் கற்றையாக்கி உள்ளங்கையில் செலுத்தி சுரீரென்று சுட்டது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் மே மாத வெயிலில் மண்டை காயும் போது மிஞ்சிப்போனால் ‘பாழாய் போன வெயில்’ என்று அலுத்துக்கொள்கிறோம், அவ்வளவே. ஒற்றை ஒளிக்கற்றை சுரீரென்று சுடுவதும் மொத்த வெயில் அந்தளவு சுடாமல் இருப்பதும் எதனால்? ‘ஃபோகஸ்’! ஒளிக்கற்றை லேசர் ஆகும் போது அபரிமிதமான சக்தி பெற்று வைரத்தை கூட அறுக்கிறது. ...
சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்? சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

சொல்லத் தோணுது – கடவுள் என்ன செய்கிறார்?

கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன. பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் ...