வாழ்க்கையை அழகாக்கும் முதுமை வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது. “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார். உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன. 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான ...
வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள் வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக் கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன. தமிழ் நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக் கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணியை ஆராயும் பெட்டகத் தொடரின் முதல் பகுதி. “100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?” மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு ...
காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்! காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

இரு நாட்டுத் தலைவர்களின் அரசியல் விளையாட்டுக்குப் பகடைக்காய்தான் காஷ்மீரா? ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பிரதானமான நாட்டுக் கவலைகளில் ஒன்றாக காஷ்மீர் இருக்கிறது. தன் நாடு வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது ஒரு குடிமகனுக்குத் தன் சொந்த வலிமையை உணர்வதாக இருக்கக்கூடும். அதே சமயம், தொடர்ந்து வரும் எல்லா அரசுகளுக்கும் அது தன்மானப் பிரச்சினையாக இருக்கிறது. பல தலைவர்கள், பல கட்சிகள் என்று இந்திய ஆட்சிக் கட்டில்களில் மாறிமாறி அமர்ந்தாலும் காஷ்மீரின் ...
தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா? தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?

தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?

  அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவுகளை ஈடேற்ற, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்காக 2-ம் ஆண்டாக வெற்றிகரமாகத் தொடரும் ‘சூப்பர்-30’ திட்டத்தை, அரசே மாநிலம் முழுக்க நடைமுறைப்படுத்தலாம் என்கின்றனர் கல்வியாளர்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது அறிமுகப்படுத்திய ‘சூப்பர்-30’ என்ற உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம், பயின்ற அனைத்து மாணவ மாணவி களுமே அதிக ...
அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே! அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே!

அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே!

எப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தியாக இருந்தாலும் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் கழித்தாக வேண்டும் என்பது சாஸ்திரம். சென்னை மாநகரத்தில் எத்தனையோ விதமான வாகனங்களில் பயணித்தாலும் சென்னை பீச் – தாம்பரம், சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் போகாதவர், போக வேண்டிய அவசியம் இல்லாதவர் மனிதரே அல்ல. ஒரு முகூர்த்த காலம் அல்ல, ஏராளமான முகூர்த்த காலங்கள் இதிலேதான் கழிகிறது. சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ...
நோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு நோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு

நோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு

இங்கதான் வச்சிருந்தேன் எங்க போச்சுன்னே தெரியல என்னும் புலம்பலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பல் அது. ஏனெனில் பூட்டைப் பூட்டி சாவியை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம். சாவி தொலைத்து சங்கப்படக் கூடாது என்பதற்காக சில நம்பர் பூட்டுகளும் வந்தன. ஆனால் நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும் ஆனால் சாவியும் இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஈடேறாத ஆசை. ...