மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம் மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்

மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; ...
இந்தியாவிர்க்கு  தேவை, சிந்தனை மாற்றம்! இந்தியாவிர்க்கு  தேவை, சிந்தனை மாற்றம்!

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு, இந்திய வேளாண் துறையின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவியும் மொசாம்பிக் நாட்டுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே, மியான்மரிலிருந்து பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. அண்மையில் பருப்பு விலை கிலோ ...
பிளிப்கார்ட் விற்பனை எப்படி நடக்கிறது? பிளிப்கார்ட் விற்பனை எப்படி நடக்கிறது?

பிளிப்கார்ட் விற்பனை எப்படி நடக்கிறது?

அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி இவ்வளவு குறைவான விலைக்கு விற்கிறார்கள் என்ற சந்தேகம் பில்லியன் டாலர் கேள்வியாக எல்லாரிடத்திலும் இருக்கிறது? கொஞ்சம் விலாவரியாகப் பார்க்கலாமா? எப்படி முடியும்? எங்கள் நிறுவனம் சிபேடு என்ற டேப்ளட் தயாரிப்பதற்காகச் சீன நிறுவனங்களை அணுகியபோது பலதரப்பட்ட விலைப் படிவங்கள் வந்தவண்ணம் இருந்தன. நண்பரின் ஆலோசனைப்படி எக்சலில் வரிசைப்படுத்திப் பார்த்தபோது ஏறக்குறைய எல்லா நிறுவனங்களின் விலையும் ஒரே மாதிரி இருந்தன. வந்தவற்றில் ...
நெருக்கடியில் கிரேக்கம் நெருக்கடியில் கிரேக்கம்

நெருக்கடியில் கிரேக்கம்

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிரேக்கம். குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடி தவணையைத் ...
உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பொருட்கள் உட்கொள்வதற்கு உகந்தது இல்லை ...
இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்! இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

இதய நோயாளிகளுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை நீக்கிவிட்டு, ரத்தம் சீராகப் பாய்ந்து செல்லச் சிறு குழாய்கள் (ஸ்டென்டுகள்) பொருத்தப்படும். மகாராஷ்டிரத்தில் உள்ள பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழாய்களுக்கு அதிக விலை வைத்துப் பணம் வசூலிப்பதைக் கண்டறிந்து, அந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இவ்வகை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் சிகிச்சைக்கான செலவுபற்றிய தகவல்களைத் திரட்டிய கட்டுப்பாட்டாளர், ரூ.25,000 ...
Powered by Big Tech Tips Online - Widget