போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை! போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

குலவையிட்டுக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கை; சான்றோர் வாக்கு. மூத்தோர் வழியைக் காரணம் அறியாமலேயே போற்றுவதும் தூற்றுவதும் அன்றாட வழக்கமாகிவிட்ட இன்றைய நாளில் போகிக் கொண்டாட்டத்தைக் கொஞ்சம் யோசியுங்கள். பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். ...
பயத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கும் மருத்துவ பரிசோதனைகள்; நோயாளிகளே உஷார்! பயத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கும் மருத்துவ பரிசோதனைகள்; நோயாளிகளே உஷார்!

பயத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கும் மருத்துவ பரிசோதனைகள்; நோயாளிகளே உஷார்!

புதுடில்லி : பல நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு வருமானத்தை உயர்த்துவதற்காக, மக்களை கவரும் வகையிலான சலுகை விலையில் மருத்துவ பரிசோதனை திட்டங்களை அறிவிக்கின்றன. இத்தகைய பரிசோதனைகளை செய்து கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 28 வயதாகும் ரிதிமா சென் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல நாட்களாக தனக்கு இருந்து வந்த இடுப்பு வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த ...
கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள் கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் ...
7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை 7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

மும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும் வைத்துள்ளது. மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு, கடந்த, 3ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. இந்த ஐந்து நாள் மாநாட்டில், விஞ்ஞானிகள் பலர், ஆக்கப்பூர்வமான ...
குழப்பம் தீரட்டும்! குழப்பம் தீரட்டும்!

குழப்பம் தீரட்டும்!

தகவல் தொலைத்தொடர்பால் ஏற்பட்டிருக்கும் புரட்சியால் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. கலாசார சீரழிவுக்கு தகவல் தொலைத்தொடர்பு வழிகோலியிருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, இதனால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. “குவளையில் பாதி அளவுக்குத் தண்ணீர் என்பதா, குவளை பாதி காலியாக இருக்கிறது என்பதா’ என்பதைப் போன்றதுதான் தகவல் தொலைத்தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நன்மையும் தீமையும். அதிவேகமான தகவல் பரிமாற்றமும், எந்தவிதமான தணிக்கையோ, தடையோ ...
இதுதான் அமெரிக்க நியாயம்! இதுதான் அமெரிக்க நியாயம்!

இதுதான் அமெரிக்க நியாயம்!

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தவர் களை அமெரிக்காவின் சிஐஏ அமைப்பினர் கடுமையாகச் சித்தரவதை செய்திருப்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியிருக்கிறது. இதை வெளிக்கொண்டுவந்தவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான டயான் ஃபென்ஸ்டைன் என்ற பெண். இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான விசாரணை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றெல்லாம் சொல்லி அமெரிக்கா செய்திருக்கும் மனித உரிமை மீறல்கள் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் ஜனநாயகவாதிகளையும் அதிர வைத்திருக்கிறது. மனித ...