ஒக்கி புயலின் பாதிப்புகள் குமரியை அடித்து நொறுக்கியிருக்கின்றன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்குச் சென்ற ஏராளமான மீனவர்கள் காணாமல்போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குமரியை கேரளத்துடன் இணைக்க வேண்டும் என்கிற அளவுக்குத் தமிழக அரசு மீதான அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, குமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டவரும் சமூகச் செயல்பாட்டாளருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுடன் இதுகுறித்துப் பேசினேன். அவருடனான பேட்டி: உங்களுக்கு 90 வயதாகப்போகிறது. ...
புது டெல்லி 17 ஏப்ரல் 1950 அன்புள்ள பந்த் அவர்களுக்கு, உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையில், உத்தர பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தர பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னை வியக்கவைக்கிறது. உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ...
இஸ்லாம் மதத்துக்கு மாறி காதல் திருமணம் செய்துகொண்ட கேரளத்தைச் சேர்ந்த ஹாதியாவை அவரது பெற்றோரிடமிருந்து விடுவித்ததன் மூலம், விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அவரது சுதந்திரத்தையும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் எனும் சுதந்திரத்தையும் பாதுகாத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தனது கணவருடன் சேர்ந்து வாழவும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றவும் விரும்பிய ஹாதியா, அவரது விருப்பத்துக்கு மாறாக, அவரது பெற்றோருடன் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரவு இது. ஐஎஸ் இயக்கத்தில் ...
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; ...
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களைத் தனது கொலிஜியப் பரிந்துரை மூலம் நியமிக்கும் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போது அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் மூலம் இந்தியாவில் அகில இந்திய நீதிபதிகள் சேவையை (All India Judicial Service) உருவாக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் நியமனங்களும் மையப்படுத்தப்பட்டு, அகில இந்திய ...
உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு ஆளாகி அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படுவது மிகவும் கொடுமையானது. மியான்மரின் ராக்கைன் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியாக்களைக் ...