சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார பகுதியில் நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிடிஐ செய்தியும் உறுதிப் படுத்தியது. இந்நிலையில், அவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், 3 மணிக்குதான் தண்டனை விவரம் முழுமையாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. ...
அடுத்த மாதம் 12 க்குள் ‘பார்’களை மூட கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு அடுத்த மாதம் 12 க்குள் ‘பார்’களை மூட கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு

அடுத்த மாதம் 12 க்குள் ‘பார்’களை மூட கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: ‘அடுத்த மாதம், 12ம் தேதிக்குள், ‘பார்’களை மூட வேண்டும்’ என, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களுக்கு, கேரள மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக, நோட்டீசும் அனுப்ப உள்ளது. காங்., கூட்டணி அரசு: கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில், அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள, காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, சில மாதங்களுக்கு முன், கேரளாவில், 418 ...
மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

மோடி அரசின் ஹிந்திக் கொள்கைக்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு

மோடி அரசு, மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் முதலில் ஹிந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகார பூர்வ உத்தரவுகள் ...
ஜல்லிக்கட்டுக்கு தடை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பிராணிகள் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்து புகார் மனு அளித்தனர். பிராணிகள் நல அமைப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ஜல்லிக்கட்டு தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அதை ...
தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்தது ஆகியவற்றின் வரிசையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச ...
அரசு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிந்தன தனியார் பள்ளிகள்: ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க சம்மதம் அரசு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிந்தன தனியார் பள்ளிகள்: ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க சம்மதம்

அரசு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணிந்தன தனியார் பள்ளிகள்: ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க சம்மதம்

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.25 கோடியை விரைவில் வழங்கிவிடுவதாக தமிழக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை 25 ...