பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது.   ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவதன் காரணமாக, அவரை நீக்குவது என கட்சியின் தலைமை முடிவு எடுத்தது. இதேபோல், ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ் மஹாரியாவையும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து, பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் ...
வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி

வாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தகங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதைப்போல ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றியும் 6 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அவரே எழுதிய ‘ஸ்வராஜ்’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியாவின் முந்தைய மக்களாட்சி கட்டமைப்பு மற்றும் உண்மையான மக்களாட்சி ...
திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம் திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்

திமுகவிலிருந்து அக் கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ...
பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்… பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…

டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக ...
நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்? நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு ...
ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை (சொத்துகளை முடக்குதல்) கொண்டு வரவும், விசா உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்திவைக்கவும் அமெரிக்கா, ...