எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து! எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து!

எதிர்க்குரல்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்துக்கான ஆபத்து!

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கவிஞர் வரவர ராவ், எழுத்தாளர் வெர்னான் கோன்சால்வ்ஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டதும், தொடர்ந்து அரசால் இந்த விஷயம் அணுகப்பட்டுவரும் விதமும் தொடர் அதிர்ச்சிகளைத் தருகிறது. தனக்கு எதிரான குரல்களை முடக்க அடக்குமுறையை ஓர் ஆயுதமாக அரசு கையாள்கிறதா என்ற கேள்வி உருவாவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஒரே ஆறுதல், உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை. “அவர்களைச் ...
கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம் கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்

கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்

இன்றைய நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. சாதிரீதியாக பெரும் தாக்குதலை எதிர்கொண்ட ஒரு சமூகத்தில் பிறந்த கருணாநிதி, நாட்டிலேயே அதிகபட்சமாக 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் அதிக நாள் முதல்வராக இருந்தார் என்பதும் சாதி ஆதிக்கம் செலுத்தும் ...
இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்? இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்?

இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்?

பாகிஸ்தானில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்ட மன்றங்களின் பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த நிலையில், இம்ரானின் வெற்றி ஏறத்தாழ ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில், இம்ரானுக்குக் காத்திருக்கும் சவால்கள் அசாதாரணமானவை. பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளையும் இந்தியா போன்ற பக்கத்து நாடுகளையும் குறிவைக்கும் பயங்கரவாதக் ...
ஐம்பதாண்டு தலைமை : கருணாநிதி ஒரு சகாப்தம் ஐம்பதாண்டு தலைமை : கருணாநிதி ஒரு சகாப்தம்

ஐம்பதாண்டு தலைமை : கருணாநிதி ஒரு சகாப்தம்

திமுக தலைவராகப் பொறுப்பேற்றதன் அரை நூற்றாண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், தாங்கள் தொடங்கி நடத்திய கட்சியின் தலைவர்கள் அல்லது ஒரு கட்சியை உடைத்துக்கொண்டு தலைவராக வந்தவர்கள். விதிவிலக்கான சிலரில், திராவிடர் கழகம் என்ற தேர்தல் அரசியல் சாராத இயக்கத்திலிருந்து பிரிந்து, அண்ணா தொடங்கிய திமுகவில் தொண்டராக, செயல்வீரராக, கட்சியின் முன்னணித் தளகர்த்தர்களில் ஒருவராக என்று ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்து கட்சித் தலைவர் நிலையை ...
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு? நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு?

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு?

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. இது வெற்றி பெறாது என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கும் தெரியும், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கும் தெரியும். மோடி அரசின் நான்கு ஆண்டு காலத் தவறுகளையும், பாதிப்புகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்ல ஒரு வாய்ப்பாகக் கருதியே இந்த உத்தியை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. அந்த வகையில் ஓரளவுக்கு அவை ...
இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள் இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்

இடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்

நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), ...