நியூட்ரினோ என்னும் புதிரான துகள் நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

தேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன். ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது. பூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும், சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் ...
ஜனநாயகத்துக்கு மரியாதை ஜனநாயகத்துக்கு மரியாதை

ஜனநாயகத்துக்கு மரியாதை

“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று ...
வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்! வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வாழ்த்துகள் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...
குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம் குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்

குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்

சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான, அனிர்பன் ராய் கூறியதாவது: ஒரு சராசரி இந்தியருக்கு ஹீமோ டயாலிசிஸ் செய்வது மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். அதற்கான கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே ...
வேண்டாம் ரசாயன உரங்கள் வேண்டாம் ரசாயன உரங்கள்

வேண்டாம் ரசாயன உரங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மற்ற துறைகள் நவீனத்துக்கு மாறிவிட்ட நிலையில், விவசாயமும் நவீன முறைக்கு மாறினால்தான் ...
கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள் கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது நமக்கு. ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இது 102-வது காங்கிரஸ். அறிவியல் அறிஞர்கள் கூடுவதைத் திருவிழா போன்று நடத்துவது உலகில் எங்கும் நடக்காத அதிசயம். எனக்குத் தெரிந்த அளவில், அறிவியல் காங்கிரஸுகளில் படிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் கட்டுரையும் உலக அளவில் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் பேசுபவர்களும் அறிவியலைப் பற்றிப் ...