கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி ...