துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Discovery of Star Colder than the Pole

வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, “ஜே085510.83-071442.5′ என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட, குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, – 48ல் இருந்து, – 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட, மூன்று முதல் 10 மடங்கு வரை, இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP