female robot reading the news

உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் ரோபோ ஒன்றை செய்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செய்தி வாசிக்கும் பெண் போலவே மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் ரோபோவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினர்களுடன் இணைந்து செய்த ரோபோவை செய்தி வாசிக்க செய்து அசத்தினார். இந்த ரோபோவுக்குள் செய்திகளின் டேட்டாக்களை பதிவு செய்துவிட்டால், அதை அந்த ரோபோ மிக தெளிவான உச்சரிப்புடன் ஒரு செய்தி வாசிக்கும் பெண் போலவே முகபாவனையுடன் செய்தியை வாசிக்கின்றது.

இந்த செய்தி வாசிக்கும் ரோபோக்கள் தற்போது இரண்டு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தை ரோபோ (kodomo ) ஒருவகை. என்றால் குழந்தை என்று ஜப்பான் மொழியில் அர்த்தம். இந்த வார்த்தையும் ஆண்ட்ராய்டு (android)என்ற வார்த்தையும் இணைந்து கோடோமொராய்டு (Kodomoroid) என்ற வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மழலை மொழியில் செய்தி வாசிக்கும். ஓட்டோனாராய்டு (Otonaroid)என்பது இன்னொரு வகை. வயது வந்தவர்கள் (Otona)என்ற ஒருவகை என்று

எதிர்காலத்தில் இன்னும் புத்திசாலியான செய்தி வாசிக்கும் ரோபோக்களை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக இந்த ரோபோக்களை உருவாக்கிய இஷ்கியுரோ கூறியுள்ளார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *