வீடியோ பதிவு: இணையத்தில் நெகிழவைக்கும் உதவிக் குரல்

‘இந்த தீபாவளிப் பண்டிகையை இவர்களோடு கொண்டாடுங்கள்: விசாகப்பட்டினத்திற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது’ என யூடியூபில் உலவவிடப்பட்டுள்ள ஒரு சிறிய வீடியோ பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

ஹுத்ஹுத் புயல் – அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த இந்த புயல் அந்த மாவட்டத்தை வெகுவாக சீண்டி சீர்குலைத்துவிட்டது. புயல் பாதிப்புகளில் இருந்து மீள பல மாதங்கள் பிடிக்கும்.

டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் தாமாகவே முன்வந்து நிதியுதவி அளித்துள்ளனர். இது தவிர, புயலால வீடுகள் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திர முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்பிவருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக உதவ வலியுறுத்தும் வகையில் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் முயற்சியில் இந்த வீடியோ உருவாகியுள்ளது. அவரது வேண்டுகோளுக்கு ஏற்று, இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, நாம் செய்யும் சிறு உதவியும் யாரோ ஒருவரின் வேதனையை பெருமளவில் குறைக்கும் என தெரிவித்துள்ளார்.

தேவதை போல் ஓடி வரும் ஒரு பெண் குழந்தை தனது தாத்தாவிடம் தீபாவளி கொண்டாட பணம் வாங்குகிறாள். ஒரு நொடி யோசித்துவிட்டு அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தனது தாத்தாவிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறாள், பட்டாசு வாங்க காசு வாங்கும் சிறுவனம் அதில் கொஞ்ச பணத்தை தனது தந்தையிடமே திரும்ப கொடுக்கிறான், ஏக்கத்தோடு பட்டாசு கடையை பார்த்திருக்கும் ஏழைச் சிறுவனக்கு பட்டாசு கடைக்காரர் இரண்டு புஷ்வானங்களைக் கொடுக்க அதில் ஒன்றை மீண்டும் கடைக்காரருக்கே கொடுத்து விடுகிறான். திகைத்துப் போன பட்டாசுக்காரரிடம், தன்னைப் போல் வேறு குழந்தை வந்தால் அதனிடம் கொடுக்கச் சொல்கிறான். நாம் செய்யும் சிறு உதவியும் யாரோ ஒருவரின் வேதனையை பெருமளவில் குறைக்கும் எனும் கருவை உணர்த்தும் இந்த வீடியோவில் நடிகர்களும், குழந்தை நட்சத்திரங்களும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். ஆழமான கருத்தை எளிய காட்சிகள் மூலம் விளக்கும் இந்த வீடியோவின் முடிவில், Account name: AP CM Relief Fund, SBI account: 33913634404 (or) 34243087405, IFSC Code: SBIN0002724, Branch Name: SBI Treasury Branch, Gowliguda, Hyderabad என்ற முகவரியும் காட்டப்படுகிறது.

மனிதம் இன்னும் இருக்கிறது என்பதை எத்தனை பேர் இந்த தீபாவளிக்கு உணர்த்துவீர்கள்.

தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
Subscribe to our email newsletter today to receive updates on the latest news from all leading Tamil News Papers and TV Channels!
No Thanks
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
We respect your privacy. Your information is safe and will never be shared.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup