மீண்டும் கற்காலத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் நாம். வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இன்றி. மனிதர்களுக்கான ஒழுக்கம், பண்பு போன்றவற்றை இழந்து, மிருகத்தோடு மிருகமாக கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

உலக அளவில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கற்பழிப்பு வழக்கள் அதிகரித்து வருவது கொடுமையான விஷயமாக இருக்கிறது. 2012ஆம் வருடத்தில் 24,923 கற்பழிப்பு வழக்கள் பதிவானது. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஓர் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறித்து தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவதுள்ளன.இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 48,338 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் (10 ஆண்டுகளில்) குழந்தைகள் கற்பழிப்பு விகிதம் 336 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் 2,113 ஆக இருந்த குழந்தை கற்பழிப்பு எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 7,112 ஆக அதிகரித்துள்ளது.
2001 – 2011 ஆம் ஆண்டு வரை குழந்தைகள் கற்பழிப்பு சம்பவங்களால் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 9,465 வழக்குகளும், மகராஷ்டிராவில் 6,868 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 5,949 வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கற்பழிப்புகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு நடப்பதாக கிடைத்த இப்போதைய ஆய்வு தெரிவிக்கிறது

முன்னதாக 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்புக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் கற்பழிக்கப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர் என்றும் இவர்களை நாசப்படுத்தியவர்களில் சரி பாதிப் பேர் நன்கு அறிமுகமானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர்களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளதும் நினைவு கூறத்தக்கது.

சர்வதேச நாடுகளில் பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும் கூட குற்றங்களை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்துதல், தீவிரவாதத்தில் ஈடுப்படுதல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு பல நாடுகள் மரண தண்டனையும், ஆயுள் தண்டனையையும் வழங்கி வருகிறது.

இந்த வரிசையில், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா மட்டுமே கற்பழிப்பு குற்றத்திற்கு கடுமையான, கொடூரமான தண்டனையை வழங்கி வருகிறது. கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் முதல்  சவுதி அரேபியா இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கற்பழிப்பு குற்றத்திற்கு மிகவும் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர் விரைவாகவும், எளிதாகவும் இறந்து விடக் கூடாது என்பதற்காக அவர் மீது கற்கள் வீசப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். பின்னர், வலியால் துடிக்கும் அவர் மீது கற்கள் போடப்பட்டு நிரப்பப்படுவதால் அவரது உயிர் எளிதில் பிரிந்து விடாமல் சித்ரவதை அனுபவித்து இறுதியில் உயிரை விடுகிறார். சில நேரங்களில், கற்பழிப்பு குற்றவாளியை பொது இடத்தில் நிறுத்தி அவரது தலையை துண்டாக வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த தண்டனைகள் பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படுவதினால் அதை பார்க்கின்ற மனிதர்களுக்கு பயம் ஏற்படுகின்றது அதனாலேயே உலகத்திலேயே மிகக்குறைந்த கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் நாடாக சவூதி அரேபியா இருக்கின்றது.

இந்தியாவிலும் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலேயொழிய கற்பழிப்புகளையும் கொலைகளையும் குறைக்கமுடியாது என்பது தான் நிதர்சனம்

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *