சோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

Sonia, Rahul to rest Cong., Chairman speech controversy

புதுடில்லி : சோனியாவும், ராகுலும் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் எனவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது எனவும் பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஜக்மித் சிங் பிரார் தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினரான ஜக்சித் சிங் பிரார் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் 2 ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்; அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது; காங்கிரஸ் கட்சி தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது; அதனை சரிசெய்ய கட்சியை சீரமைக்க வேண்டியது அவசியம்; சமீபத்திய தேர்தல்களில் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்;
புதிய நிர்வாக குழுவிடம் கட்சி ஒப்படைக்கப்பட வேண்டும்; காந்திய வழியை கடைபிடிப்பவர்களை கட்சிக்கு திரும்ப கொண்டு வர வேண்டும்; சில தலைவர்கள் மட்டும் கட்சியை வழிநடத்தும் நிலையை மாற்ற வேண்டும்; கட்சிக்கு ஆலோசனை வழங்குபவர்கள், கட்சி தொண்டர்கள் தலைமை எடுக்கும் முடிவுகளில் தலையிடக் கூடாது என கருதுகின்றனர்; அவ்வாறு தலையிடுபவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகின்றனர்; லோக்சபாவில் பெற்ற தோல்விக்கு சோனியாவும், ராகுலும் மட்டும் பொறுப்பல்ல; ஆனால் அவர்களும் தான் பொறுப்பு; இதற்கு அனைவரும் தான் பொறுப்பு; நான் சொல்ல வருவது என்னவென்றால், வெகு காலமாக கட்சியின் தலைமை பொறுப்பை நிர்வகித்து விட்ட சோனியாவும், ராகுலும் ஒரு 2 ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொள்வதால் கட்சிக்கு தீங்கு ஏதும் நேர்ந்து விடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெகு காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விட்டதால் காந்திகள், தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள் முதலில் குரல் எழுப்பியவர் பிரார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
அனைத்து முன்னணி தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களிலிருந்தும் சமீபத்திய செய்திகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற இன்று எங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு பதிவுசெய்யவும் !
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் தகவல் பாதுகாப்பானது மற்றும் ஒருபோதும் பகிரப்படாது.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup