மாத ஊதியம் பெறும் மக்களுக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. வீட்டுக் கடன் வட்டியில் 1.5 லட்சம் வரையில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயனளிக்கும் அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல், நாடு முழுவதும் 9.5 கோடி கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படும். 75,000 பேருக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதுபட்ஜெட்டில் வெளியான பல்வேறு அறிவிப்புகள் அந்தந்த துறைக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கலாம் ஆனால், தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனே தங்கத்தின் விலை அதிகரித்துவிட்டது. அதேபோல், பெட்ரோலுக்கான சிறப்பு கூடுதல் வரி லிட்டருக்கு 7 லிருந்து 8 ஆக உயர்த்தப்படுகிறது எனவும், டீசலுக்கான சிறப்பு கூடுதல் வரி லிட்டருக்கு 1லிருந்து 2 ஆக உயர்த்தப்படுகிறது மேலும் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் சாலை மற்றும் கட்டமைப்பு வரி லிட்டருக்கு 8லிருந்து 9 ஆக உயர்த்தப்படுகிறது.

ஆக மொத்தத்தில் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு 2 வரி உயர்த்தப்பட்டுள்ளது.பட்ஜெட் தாக்கல் செய்து, நிதியமைச்சர் பேசுகையில், புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டினார். அதில் வரி வசூல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நிதியமைச்சர் மேற்கோள் காட்டிய பாடல் மிகச்சரியானது. ஆனால், சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகத்தான் பட்ஜெட் அறிவிப்பு இருந்தது. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு, தங்கம் மீதான வரி விதிப்பு ஆகியவை சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை அமைச்சர் உணராமல் போனதுதான் புரியவில்லை.

பெட்ரோல் விலை 73 ரூபாயாகவும் டீசல் விலை 67 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த கூடுதல் வரி விதிப்பால் மேலும் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அதைத் தொடர்ந்து சரக்கு போக்குவரத்து கட்டணம் உயரும் இதனால் பொருட்களின் விலை உயரும். ஒட்டுமொத்தத்தில் விலைவாசியும் உயரும். விலைவாசி உயர்ந்தால் எப்படி பொருளாதாரம் வளர்ச்சி பெறும்?  இதை அமைச்சர் கருத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. அமைச்சர் சொன்ன யானை கதையையே இந்த விஷயத்தில் பார்த்தால், பல்வேறு ஆக்கப்பூர்வனமான அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு யானை, வயலில் இறங்கிய கதையாகத்தான் முடியும்.

www.dinakaran.com

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *