சிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Tamil_News_large_946756

சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

 

தென்பசிபிக் கடல் ஒட்டிய சிலியின் இக்யூகியூ தீவு பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் இந்த நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பீதியுடன் வீதிகளுக்கு வந்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன, 8 முறை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 20. 1 கிலோ மீட்டர் ஆழம் வரை இந்த நடுக்கம் இருந்தது. இந்த நடுக்கம் ஏற்பட்ட போது பலரும் தங்களை காத்து கொள்ள வீதிக்கு வந்த போது கடும் நெரிசல் உருவானது. இதனால் அங்கும், இங்கும் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்த நடுக்கம் குறித்து இக்யூகியூ கவர்னர் கோன்சாயோ பிரிட்டோ கூறுகையில், பல வீடுகள் முழுமையாக சேதமடைந்து இருப்பதாகவும், பலர் காயமுற்று இருப்பதாகவும் தெரிகிறது. பெரு, பொலிவியாவிலும் இந்த நடுக்கம் எதிரொலித்ததை உணர முடிந்தது என்றார்.

 

அதிபர் பெக்லட் கூறுகையில் இந்த பகுதி பேரழிவை சந்தித்துள்ளது. இதற்கான மீட்பு பணிகள் துவங்கியிருக்கிறோம். நாளை (வியாழக்கிழமை) அங்கு சென்று பார்வையிடவுள்ளேன், என்றார்.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP