ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை

Tamil_News_large_942516

ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

முன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ஏனைய உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என்றும் இலங்கையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி கோரினார். இந்தியா தரப்பில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் தனது நிலையை வெளிப்படுத்தி ஒட்டெடுப்பை புறக்கணித்தது. இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும், இலங்கையை சர்வதேச கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் எழுந்துள்ள குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. அண்டை நாட்டு உறவை பாதிக்கும் என்பதால் நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். இங்கு வடக்கு மாகாண தேர்தல் நடத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்நேரத்தில் இந்த தீர்மானம் இலங்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மேலும் கடும் எதிர்ப்பை தமிழக மக்களிடம் சம்பாதித்து கொண்டுள்ளது.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP