தடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவுபார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ

vaccine is not going to on the use of spy

அமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ தமது வேவுப் பணிகளுக்கு ஒரு திரையாக தடுப்பூசி திட்டங்களை இனி பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தேடப்பட்டுவந்த சமயத்தில் ஒரு தடுப்பூசி நடவடிக்கையை சி ஐ ஏ பயன்படுத்தியிருந்தது தொடர்பில் அமெரிக்க மருத்துவதுறை வல்லுநர்கள் முறையிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒஸாமா பின்லாந்தின் உறவுக்கார குழந்தைகள் என்று தாம் நம்பிய குழந்தைகளின் மரபணு மாதிரிகளை காமாலை நோய் தடுப்பூசி திட்டத்தின் வழியாகப் பெறுவதற்கு 2011ஆம் ஆண்டு சி ஐ ஏ முயற்சித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர், போலியோ தடுப்பூசி முகாம்களை இலக்குவைத்து பாகிஸ்தானிய தாலிபான்கள் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி திரைமறைவில் ஒற்று வேலை செய்கிறார்கள் என்று தாம் நம்புவதாக பாகிஸ்தானிய தாலிபான்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட உலக சுகாதார நிறுவன ஆய்வுகளில் பாகிஸ்தானில் போலியோ மீண்டும் தலைதூக்குவதாகத் தெரியவந்திருந்தது.

பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP