உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

சிறு தொழில் ஒன்றின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், உங்களுடைய எல்லா வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளையும் விரைவாக மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய நீங்கள் விரும்பியதுண்டா?

“வாட்ஸ்அப் பிஸ்னஸ்”

இந்தியா முழுவதுமுள்ள சிறு தொழில் உரிமையாளர்கள் தங்களின் சொந்த இணையதளத்திற்கு நிகரான ஒன்றை வாட்ஸ் ஆப்பில் உருவாக்கி செயல்திறன்மிக்க முறையில் வணிகம் செய்யும் மென்பொருளை (App) வாட்ஸ் ஆப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, இந்தோனீஷியா மற்றும் மெக்ஸிகோவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த மென்பொருள் “வாட்ஸ்அப் பிஸ்னஸ்” (WhatsApp Business – இணைப்பு: https://www.whatsapp.com/business/) என்று அழைக்கப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் ஆன்ட்ராய்டு செல்பேசிகளில் இந்தியாவில் இது வெளியாகவுள்ளது.

“வாட்ஸ்அப் பிஸ்னஸ்” என்ன செய்யும்?

வணிக விவரங்கள்: மின்னஞ்சல், கடை, முகவரி மற்றும் இணையதளம் அல்லது தொலைபேசி எண் ஆகிய அதிகாரப்பூர்வ தகவல்களை அவர்களின் பக்கம் கொண்டிருக்கும்.

குறுஞ்செய்தி அனுப்பும் கருவி: கம்பெனியை அறிமுகப்படுத்தும் வாழ்த்து செய்திகள் மற்றும் அதிக வேலையாக இருப்பது, வாடிக்கையாளுக்கு தெரியமாறு “வெளியே” என அமைத்து கொள்வது என பொது கேள்விகளுக்கு விரைவாக தானாகவே விடையளிப்பதை அமைத்து கொள்ள முடியும்.

செய்தி புள்ளிவிபரங்கள்: வாசிக்கப்பட்ட செய்திகள் மற்றும் எது நன்றாக வேலை செய்கிறது என்பது பற்றிய எளிதான தரவுகள்.

வாட்ஸ்அப் வெப்: சாதாரண வாட்ஸ்அப் போல, மேசை கணினிகளிலும் இந்த “வாட்ஸ்அப் பிஸ்னஸ்” மென்பொருளும் செயல்படும்.

சரிபார்க்கப்பட்ட கணக்குகள்: வியாபாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணோடு ஒத்துப்போனால் ஒரு வணிகத்தின் எண் உறுதி செய்யப்படும். அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு சரிபார்க்கப்பட்டதை காட்டுவதாக பச்சை நிற அடையாளம் இடம்பெற்றிருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

இதற்கு வாடிக்கையாளர்கள் தனிப்பட்டதொரு மென்பொருளை தரவிறக்க வேண்டும் என்றில்லை. ஏற்கெனவே இருக்கின்ற சாதாரண வாட்ஸ்அப் கணக்கு மூலமே வணிக தொடர்பாடல்களை மேற்கொள்ளலாம்.

ஒரு வணிக நிறுவனத்தின் தொலைபேசி தொடர்பு எண்கள் உங்களுடைய தொலைபேசியில் இல்லாமல் இருந்தால், அந்த நிறுவனம் அனுப்பும் செய்திகள் அவர்களுடைய தொலைபேசி எண்களை காட்டாமல், பதிவு செய்யப்பட்டிருக்கும் வணிகத்தின் பெயரில் தோன்றும்.

‘டெக்கிரன்ஜ்’ இணையத்தளத்திடம் கடந்த ஆண்டு பேசியபோது, தங்களுடைய தொலைபேசி எண்களை பதிவிட்டு, வாட்ஸ்அப் வழியாக வணிகம் செய்யும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டவர்கள் மட்டுமே, மக்களை தொடர்பு கொள்ள முடியும் என்று வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியது.

விமர்சனங்கள்

இந்த ஆப் (App) பற்றிய தொடக்க விமர்சனங்கள் கலவையாக உள்ளன.

பாதுகாப்பான மின்னஞ்சல் முகவரி அல்லது கடவுச் சொல் (password) வழங்குவதை தவிர, வெறுமனே தொலைபேசி எண்ணை வைத்து வணிகத்தை மேற்கொள்வது பற்றி அமெரிக்கா புகார் தெரிவித்திருந்தது.

இந்தோனீஷியா மற்றும் மெக்ஸிகோவில் நடைபெறும் வணிகங்கள் மிகவும் நன்றாகவே நடைபெற்று வருகின்றன.

தற்போது இவ்வாறு வணிகம் நடத்துவது இலவசமாக நடைபெறுகிறது.

ஆனால், இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மேத் இடிமா செப்டம்பரில் வால் ஸ்டிரீட் பத்திரிகையிடம் பேசியபோது, “எதிர்காலத்தில் இவ்வாறு செய்யும் வணிகங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

www.whatsapp.com/business

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *