போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் போகிமோன் ஆகிய விளையாட்டுகளை காணொளியாக பதிவு செய்து யூடியூபில் பகிரத் தொடங்கினார்.

16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை யூடியூபில் பெற்றுள்ள இவரின் காணொளிகளை 10 பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

டான் மிடில்டன் என்பதை தனது இயற்பெயராக கொண்ட இவர், கடந்த ஆண்டின் முதல் 10 பேர்களில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற நான்கு பேர் மட்டும்தான் இந்தாண்டுக்கான முதல் பத்து பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இவ்வருடத்துக்கான பட்டியலில் ஒரேயொரு பெண்தான் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த லில்லி சிங் என்பவர் சுமார் 66 கோடி வருமானத்துடன் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

1. டேனியல் மிடில்டன் – 105.67 கோடி

டான் டிடிஎம்
டான் டிடிஎம் “தி டயமண்ட் மைன் கார்ட்” என்று அழைக்கப்படுகிறார்.

2. ஈவன் பாங் – 99.37 கோடி

இப்பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள ஈவன் பாங்கும் ஒரு கேமராவார்.

3. டூட் பெர்பெக்ட் – 89.76 கோடி

24 மில்லியன் சந்தாதாரர்களுடன் கூடிய டூட் பெர்பெக்ட் என்பது முன்னாள் உயர்நிலை பள்ளி கூடைப்பந்து வீரர்களின் குழுவாகும். அவர்கள் விளையாட்டு தொடர்பான வித்தைகளையும், தந்திரங்களையும் காணொளியின் மூலம் செய்கிறார்கள்.

4. மார்கிப்லீர் – 80.14 கோடி

மார்க் பிஸ்ச்பாச் என்பதை இயற்பெயராக கொண்ட கேமரான இவர் கடந்த ஆண்டை விட பட்டியலில் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார்.

4. லோகன் பால் – 80.14 கோடி

22 வயதான லோகன் பால் தமது பெயரை வைன் ஸ்டார் என்று மாற்றிக்கொண்டு யு டியூபுக்கு வந்தார்.

6. பியூடைபை – 76.93 கோடி

இப்பட்டியலில் உள்ளவர்களிலேயே அதிக சந்தாதாரர்களை கொண்ட இவரது இயற்பெயர் பெலிக்ஸ் கெஜ்பெர்க்.

7. ஜாக் பால் – 73.65 கோடி

இப்பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ள லோகன் பாலின் இளைய சகோதரர்தான் ஜாக் பால்.

8. ரயான் டாய்ஸ்ரிவியூ – 70.52 கோடிஆறு வயதான ரயான் தனது பக்கத்தில் பலவிதமான பொம்மைகளை குறித்த தனது கருத்தை காணொளியின் மூலமாக தெரிவித்து வருகிறார்.

8. ஸ்மோஸ் – 70.52 கோடி

இயன் ஹெக்கோஸ் என்ற இயற்பெயரை கொண்ட இவர், நகைச்சுவை சார்ந்த யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.

10. லில்லி சிங் – 67.24 கோடி

கடந்த ஆண்டுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த லில்லி தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

-பிபிசி செய்திகள்

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *