சென்னை: 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, இன்று முதல் டிச.9ம் தேதி வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் டிச.10ம் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
The post ஃபெஞ்சல் புயல் எதிரொலி: 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு appeared first on Dinakaran.