அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.
imageஇந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசால் ஈடுபட்டு வருகின்றனர்.