ஐதராபாத்: தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி படிப்பதை கட்டாயமாக்கி கடந்த 2018ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிப் பிரச்னையால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தாய் மொழியை காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க துவங்கிவிட்டன. இந்த நிலையில், தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற 2025-26 கல்வியாண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
The post அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு appeared first on Dinakaran.