
சென்னை: கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, அன்பு மற்றும் இணக்கமான சமூகத்தைவளர்க்க அருள்புரியட்டும்.

