அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கம்

சென்னை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி “பொதுக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களின் உணர்வுகள் தெரிவித்து வருகிறீர்கள். 1.50 கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள்தான் கூறுகின்றனர். உங்களுடைய உணர்வுகளை தீர்மானமாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். அதுவரை அமைதி காக்கவும்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,ஜெ.சி.டி பிராபகர், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.