
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நிரப்பும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

