இசை அமைப்பாளர் டி.இமான். ஆானது தனது எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் அவர், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் பாஸ்வேர்டையும் மாற்றியுள்ளனர். என் கணக்கை மீட்டு தருமாறு எக்ஸ் தளத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளேன்.
இசை அமைப்பாளர் டி.இமான் எக்ஸ் தள கணக்கு முடக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இசைத்துறையில் இருப்பதால் எனது பாலோயர்களின் தொடர்பு எனக்கு மிகவும் முக்கியம். என்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான பதிவுகள் வந்தால் அதைப் பொருட்படுத்த வேண்டாம்" தெரிவித்துள்ளார்.