in ,

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி

Tamil_News_large_945244

காசர்கோடு , கேரளா :லோக்சபா தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான அந்தோணி நேற்று நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது இயலாத நிலையில், இடதுசாரிகள் மதசார்பற்ற அரசு அமைப்பதில் உறுதியாக இருந்தால் இணைந்து செயல்பட்டால் அதனை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்றார்.

ஒத்துழைப்பை ஏற்கவேண்டும்:

மத்தியில் ஆட்சியில் அமைக்க, காங்கிரஸ் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக இருப்பதாக கூறினார். கேரளாவின் வடக்கில் உள்ள காசர்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சித்திக்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் அந்தோணி.இத்தொகுதியில் மா.கம்யூ., எம்.பி.,யாக உள்ள கருணாகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இடதுசாரிகள் பலமாக உள்ள தொகுதிகளான பையனூர் மற்றும் கன்ஹன்காடுவில் அந்தோணி பிரசாரம் செய்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இதர கட்சிகள் ஆதரவோடு நிலையான அரசு அமைக்க திட்டங்கள் சாதமாக இருப்பதாக அந்தோணி குறிப்பிட்டார்.நாடு முழுவதும் மோடி அலை உருவானதாக பா.ஜ.,வினர் மார்க்கெட்டிங் செய்து உருவாக்கிவிடப்பட்ட கட்டுகதை என அவர் கூறினார்.

தினமலர்

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்