மாஸ்கோ: அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி செவ்வாய்க்கிழமையோடு 1,000 நாள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு தகர்ந்துள்ளன. இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. அதன் அடிப்படையில், நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.