‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கிறது. பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அனைத்துவிதமான தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும். காசாவில் நடைபெறும் சண்டை, உயிரிழப்பு சோகத்தையும், பாலஸ்தீன மக்களுக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.