ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை: சி.பி.ஐ.,க்கு ‘ பூஸ்ட் ‘டான தீர்ப்பு

Tamil_News_large_969701

புதுடில்லி: உயர் மட்ட அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என சி.பி.ஐ,. இயக்குனரகம் வரவேற்றுள்ளது.

இணை செயலாளர் அந்தஸ்துக்கு மேலான அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தும் டில்லி மாநில சட்டப்பிரிவு 6- ஏயை ரத்து செய்யவும் கோர்ட் ஆணை பிறப்பித்தது. ‘ஊழல்வாதிகள் என்போர் எப்போதும் ஊழல்வாதிகள், இவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் காப்பாற்றப்படக்கூடாது. அனுமதி பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்வதன் மூலம் சி.பி.ஐ,. சுதந்திரமான விசாரணையில் இறஙகிட முடியும். இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைகிறது. இதன்படி இணைசெயலர் மற்றும் அதற்கும் மேலான அதிகாரிகளை விசாரிக்க முடியும். தேவைப்பட்டா், அந்த அதிகாரிகள் மீது வழக்கும் பதிவு செய்யலாம்.

 

சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் நாட்டில் நிலவும் கருத்திற்கு இந்த தீர்ப்பு மேலும் பேருதவியாக அமையும் என கருதப்படுகிறது.
இந்த மனுவை பா.ஜ.,வை சேர்ந்த சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP