வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). அருகேயுள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (55). நண்பர்களான இருவரும் கோவில்பாறை கண்மாய் பகுதியில், வனப்பகுதியை ஒட்டிய அடுத்தடுத்த தோட்டங்களில் விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், தோட்டத்திலிருந்து எலுமிச்சம்பழங்களை மூட்டையாக கட்டி ஊருக்கு கொண்டு செல்வதற்காக மணிகண்டன் வந்துள்ளார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கரடி, அவரை சரமாரியாக தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு கருப்பையா ஓடி வந்தார். அவரையும் கரடி தாக்கியது. படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கண்டமனூர் வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கரடி தாக்கியதில் 2 விவசாயிகள் பலி appeared first on Dinakaran.