in ,

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

arrested2503201401

தானே,

சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலினம் கண்டறியும் சோதனை

தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார்.

இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார். இதற்கு மற்றொரு டாக்டர் ஜவகர் என்பவர் உடந்தையாக இருந்தார். இது பற்றி அறிந்த சுகாதாரத்துறை அதிகாரி ஆர்.டி. கேந்திரே, கடந்த 2011–ம் ஆண்டு 2 டாக்டர்கள் மீதும் சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்ததாக புகார் செய்து தானே கோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டது.

2 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை நேற்று தானே செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்.கவுதம் முன்னிலையில், டாக்டர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் டாக்டர் உமேசுக்கு எதிராக கர்ப்பிணி பெண்ணின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களை சுகாதாரத்துறை சார்பில் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 2 டாக்டர்களின் மீதான குற்றமும் உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இருவருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், டாக்டர் உமேசுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், டாக்டர் ஜவகருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினத்தந்தி

விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு