பாடலாசிரியர் கபிலன், தனது மகள் தூரிகையின் நினைவாக கவிதை விருதை அறிவித்துள்ளார். ‘தில்’ படத்தில் இடம்பெற்ற, ‘உன் சமையலறையில்…’ , ‘போக்கிரி’ படத்தில் ‘ஆடுங்கடா என்னைச் சுத்தி’, ‘அஞ்சாதே’-வில் ‘கத்தாழை கண்ணால குத்தாத’, ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தில் ‘ராட்சச மாமனே’ உட்பட ஏராளமான பாடல்களை எழுதியிருப்பவர் கபிலன். இவர் தனது மகள் தூரிகையின் பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் கவிதை விருதை அறிவித்துள்ளார்.
இதுபற்றி கபிலன் கூறும்போது, “மகள் தூரிகையின் இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் இவ்விருது அறிவிக்கப்படுகிறது. ஒரு பெண், ஒரு ஆண் கவிஞருக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் விருதும் வழங்குகிறோம். சமூகப் பண்பாட்டு மாற்றத்துக்கான நவீனக் கவிதைகளாகவும், நூல்கள் 2024-ல் வெளிவந்த முதல் பதிப்பாகவும் இருக்க வேண்டும்.