உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகைக்கு வருவதையொட்டி ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது காவல் துறை. வெடிகுண்டு நிபுணர்கள் அதி நவீன வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக வரும் 27-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் வருகிறார். 28-ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.