ராஞ்சி: கும்பமேளா சென்று திரும்பிய போது ஜார்கண்ட் பெண் எம்பி விபத்தில் சிக்கிய நிலையில் அவரது மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மகன், மருமகள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மாநிலங்களவை உறுப்பினர் மஹுவா மாஜி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்ப மேளாவில் கலந்து கொண்டார். புனித நீராடிய அவர், தங்களது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது காரில், அவரது மகனும், மருமகளும் உடன் சென்றனர். காரை அவரது மகன் சோம்வித் மாஜி ஓட்டிச் சென்றார். இந்நிலையில் அந்த கார் லதேஹர் சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். அவ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு ராஞ்சியில் இருக்கும் ஆர்க்கிட் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய மஹுவா மாஜியின் இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது விலா எலும்புகள் சேதமடைந்தன.
ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்தபோது அவரது மகனும் மருமகளும் காரில் இருந்தனர். மஹுவாவின் மகன் சோம்வித் மாஜி தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அதிகாலை 3:45 மணியளவில் காரை ஓட்டிச் சென்ற போது சோம்வித் மாஜி தூங்கிவிட்டதாகவும், பின்னர் என்ன நடந்தது என்றே அவருக்கு தெரியவில்லை. காருக்குள் சிக்கியிருந்த மூவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
The post கும்பமேளா சென்று திரும்பிய போது விபத்து: பெண் எம்பியின் எலும்பு முறிவு appeared first on Dinakaran.