in ,

கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்

Tamil_News_large_941314வாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின், வாரணாசி தொகுதியிலும், குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாரணாசியில், மோடியை எதிர்த்து, போட்டியிட போவதாக, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ‘இது குறித்து, மக்களின் கருத்தை கேட்க, வாரணாசிக்கு செல்வேன்’ என, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

சுற்றுப்பயணம்:
இதற்காக, 23ம் தேதி திட்டமிடப்பட்ட அவரின் வாரணாசி சுற்றுப்பயணம், நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை, ரயில் மூலம், வாரணாசி வந்த கெஜ்ரிவாலை, ரயில் நிலையத்தில், அவர் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.கெஜ்ரிவால் சென்ற வழிநெடுகிலும், நகரின், பல இடங்களில், ஆங்காங்கே, பா.ஜ., தொண்டர்கள், எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்; ‘கெஜ்ரிவால், திரும்பி போ’ என கோஷம் எழுப்பினர்.முதலில், கங்கையில் புனித நீராடிய, கெஜ்ரிவால், காசி, விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன், சுவாமி தரிசனம் செய்தார்; இதில், அவர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

மோடிக்கு எதிராக கோஷம்:
கோவிலுக்கு வெளியே, திரண்டிருந்த, பா.ஜ., தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு, ஆம் ஆத்மி தொண்டர்கள், மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.அப்போது, கெஜ்ரிவால் வந்த கார் மீது, சிலர், முட்டை வீசியதாக கூறப்பட்டது. ஆனால், இதை, அங்கிருந்த போலீசார் மறுத்தனர்.மேலும், கெஜ்ரிவால் மீது, மோடி ஆதரவாளர்கள், கறுப்பு மையை வீசி எதிர்ப்பை காட்டினர். கெஜ்ரிவால் சட்டையில் கறுப்பு மை படிந்து இருந்தது. கெஜ்ரிவால் பொதுகூட்ட மேடைக்கு செல்வதற்கு முன், தெரு முனை பிரசாரங்களிலும் ஈடுபட்டார். முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில், சுவாமி தரிசனம் முடித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:வாரணாசியில், மோடியை எதிர்த்து போட்டியிடுவது சாதாரண விஷயம் தான். மோடியை நிச்சயம் தோற்கடிப்பேன். பா.ஜ.,வின் சவாலை ஏற்கிறேன். வாரணாசிக்கு நான் அன்னியன் தான்; ஆனால், இது, உள்ளூர் தேர்தல் அல்லவே. வாரணாசி, அமேதி ஆகிய இரு தொகுதிகள் தான், இந்த தேர்தலில் முக்கியம்.

திருப்புமுனை:
பா.ஜ.,வின் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோரை தோற்கடிப்பது தான், எங்கள் லட்சியம். இந்த தேர்தல், இந்திய அரசியலுக்கு திருப்புமுனையாக அமையும்.மோடியை எதிர்த்து, பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி, என்னை யாரும் அணுகவில்லை. நானும், எந்த கட்சியையும், ஆதரவு தரும்படி அணுகவில்லை. பொது வேட்பாளர் தேவையென்றால், அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும்.நான் கடவுள் நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் என்னிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கங்கையில் குளித்தது அரசியலுக்காக அல்ல. நான் வாரணாசியில், ஒருவேளை தோற்றாலும், அரசியலில் தொடர்ந்து இருப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.

பின் வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கறுப்பு மை தெளிக்கப்பட்ட சட்டையுடன் மேடையேறிய, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:பா.ஜ.,வினர் எனக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியது போல், சோனியா, ராகுலுக்கு எதிராக செயல்பட்டுள்ளனரா. என்னை எதிர்ப்பதில், பா.ஜ., – காங்., கைகோர்த்துள்ளனர்.நான், எம்.பி., ஆக வேண்டும் என்று விரும்பியதில்லை. அப்படி நினைத்து இருந்தால், வெற்றி பெறும் தொகுதியாக பார்த்து ஓடி இருப்பேன். என் கொள்கையில், உறுதியாக இருப்பதாலேயே, டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்.இவ்வாறு, கெஜ்ரிவால் பேசினார்.

தினமலர்

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

டிவி பார்த்தபடி இறந்த மூதாட்டி பிணம் 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுப்பு