கெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்

Tamil_News_large_934879

பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது.

கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, கர்நாடகாவின், 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்காக, இக்கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூரில், இரண்டு நாள் பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி, கட்சிக்கு நிதி திரட்டும் வகையில், ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன், விருந்து சாப்பிட, 20 ஆயிரம் ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை, பெங்களூரு மத்திய தொகுதி, ஆம் ஆத்மி வேட்பாளரும், “இன்போசிஸ்’ மென்பொருள் நிறுவனத்தின், முன்னாள், மூத்த அதிகாரிகளில் ஒருவருமான, பாலகிருஷ்ணன் செய்து இருந்தார். லோக்சபா தேர்தலில், கட்சிக்கு நிதி திரட்டும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் படி, ஏராளமானோர், கெஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட்டனர். அவர்களிடம், தலா, 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது; மொத்தம், 50 லட்சம் ரூபாய் வசூலானதாக, விருந்து ஏற்பட்டாளர், சி.என். ராதாகிருஷ்ணன் கூறினார். கெஜ்ரிவால் கர்நாடக சுற்றுப்பயணத்தில், 77 லட்சம் ரூபாய், நன்கொடை அளிக்கப்பட்டதாக, கர்நாடக, ஆம் ஆத்மி தெரிவித்தது. டில்லி, உ.பி., மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக அதிக நிதி கொடுத்த மாநிலங்களில், நான்காவது இடத்தை, கர்நாடக பெறுகிறது.கர்நாடகாவில், அடுத்த மாதம், 17ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP