
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர். இதற்காக ஊர்கள் தோறும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகினறன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியிலும் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்துடன் இதற்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு உடன்பிறப்புகளுக்கு எப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஜாலியாக பாடம் எடுத்தார்.
மேடையேறிய உடனே, கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘என்ன பண்ணியிருக்கே!’ என கேட்டுக் கொண்டே வந்தவர், தொகுதி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கும் கள்ளக்குறிச்சி நகர் மன்ற தலைவரைப் பார்த்து, “என்ன சுப்பராயலு, உனக்கு என்ன பொறுப்பு கொடுத்துருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டபடியே, கூட்டத்தில் இருந்த உடன் பிறப்புகளைப் பார்த்து பேசத் தொடங்கினார்.

